கேரளாவில் பன்றிக் காய்ச்சல் - பலியான 12 வயது சிறுமி!

கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி பன்றிக் காய்ச்சலால் இறந்திருப்பது கேரள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மே 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சிறுமி இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த பின்பு சிறுமியின் ரத்த மாதிரிகள் சேகரிப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டதில் பன்றிக் காய்ச்சலால் (H1N1) பாதிக்கப்பட்டு இறந்துள்ளது கண்டறியப்பட்டது.

வெண் பன்றி

கோழிக்கோடு மாவட்டத்தில் வசித்து வரும் இரட்டை சகோதரிகள் விடுமுறையைக் கழிக்க அண்டை மாநிலம் சென்றுள்ளனர். இந்நிலையில் சகோதரிகள் இருவரும் காய்ச்சலால் பாதிக்கப்படவே, உள்ளேரிக்கு அருகில் உள்ள கொய்லாண்டி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக முதலில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்பு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து இரட்டைச் சகோதரிகளில் ஒருவர் இறந்துள்ளார். இன்னொரு சிறுமியின் உடல்நிலை சீராக இருப்பதாக மூத்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

H1N1 வைரஸ் தொற்றானது, பொதுவாக பன்றிக் காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டை வலி போன்ற அறிகுறிகளோடு தோன்றும் இந்தத் தொற்று பன்றியிலிருந்து மனிதனுக்குப் பரவுகிறது. கேரளாவில் கடந்த சில வருடங்களாக H1N1 வைரஸ் தொற்றால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு பன்றிக் காய்ச்சல் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர் சுகாதார அதிகாரிகள். இந்நிலையில் சிறுமியின் திடீர் உயிரிழப்பு கேரள மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/Rq4l6m7

Post a Comment

0 Comments