``குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றன..!” - பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 3.0 இல் பங்கேற்றார் பிரதமர் மோடி. இந்த விழாவின் போது, 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசியதாவது, ``ஜி-20 நாடுகளில் நாம் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருக்கிறோம். நமது அரசாங்கம் சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றுகிறது. பாஜகவின் இரட்டை இயந்திர அரசாங்கம் மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி - மோடி

தேவையற்ற சட்டங்களை நாங்கள் அகற்றிவிட்டோம். நாட்டில் வலுவான எதிர்க்கட்சி வேண்டும். குடும்ப கட்சிகள் அரசியலில் மட்டுமின்றி எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளை அடக்கி, முன்னேறவிடாமல் தடுக்கிறது. நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள இந்த குடும்ப உறுப்பினர்கள் எனக்கு எதிராக ஒன்றுபடுகிறார்கள்.

மத்திய அரசின் சீர்த்திருத்தங்கள் மூலம் இந்தியா ஒரு வலுவான தேசமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை நினைத்து இந்தியர்கள் பெருமை கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்திரபிரதேசம் உத்வேகத்தை கொடுக்கும்'' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/u5RdDqC

Post a Comment

0 Comments