``தேர்தல் நடக்கும்வரை தொந்தரவு செய்துகொண்டே இருப்பார்கள்!" - பாஜக-வைச் சாடிய ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, 2001 முதல் 2011 வரை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பதவி வகித்துவந்தார். இவரது பதவிக் காலத்தில் மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய ரூ.112 கோடி நிதியில் பணமோசடி நடந்திருப்பதாக, தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 2019-2020-ல் அமலாக்க இயக்குநரகம் இவரிடம் விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து அமலாக்க இயக்குநரகம் சில நாள்களுக்கு முன்னர் இந்த வழக்கில் மூன்றாவது முறையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஃபரூக் அப்துல்லாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், விசாரணைக்காக ஸ்ரீநகரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் அலுவலகத்தில் ஃபரூக் அப்துல்லா இன்று ஆஜரானார்.

மெகபூபா முஃப்தி

அப்போது பேசிய ஃபரூக் அப்துல்லா, ``இது குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. தேர்தல் நடக்கும்வரை, அவர்கள் எங்களைத் தொந்தரவு செய்துகொண்டேதான் இருப்பார்கள்" என்று மத்திய அரசை சாடினார்.

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன்னர், ``சி.பி.ஐ, அமலாக்க இயக்குநரகம் போன்ற மத்திய விசாரணை அமைப்புகள் மத்திய அரசால் எதிர்க்கட்சிகளின் குரலை அடக்கப் பயன்படுத்தப்படுகின்றன" எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/kAdPBma

Post a Comment

0 Comments