மும்பையின் தென்பகுதியில் ஒர்லி என்னும் இடத்தில் இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலின் 8 வது மாடியில் துப்புரவு பணியாளர் ஒருவர் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்நேரம் குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பணியாளர் குழந்தையின் அழுகுரல் வரும் பக்கத்தை நோக்கி சென்றார். அங்கு இருந்த கழிவறை ஒன்றில் இருந்து சத்தம் வந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருந்த குப்பை தொட்டியில் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது.
இது குறித்து போலீஸாருக்கு உடனே தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து குழந்தையை நாயர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஹோட்டல் ஊழியர்கள் உடனே அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது குழந்தையை யார் பெற்று குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது என்ற விபரம் தெரிய வந்தது. உடனே போலீஸார் அப்பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 41 வயது பெண் பணி நிமித்தமாக ஹோட்டலுக்கு வந்துள்ளார். வந்த இடத்தில் பிரசவம் ஏற்பட்டதால் குழந்தையை கழிவறை குப்பை தொட்டியில் போட்டு சென்றுள்ளார். அப்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தோம். அவர் குடும்ப பிரச்னை காரணமாக குழந்தையை பெற்று குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றதாக தெரிவித்துள்ளார்” என்று தெரிவித்தார். இக்காரியத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் இன்னும் கைது செய்யவில்லை. ஆனால் குழந்தையை விட்டுச்சென்றதாக வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்காரியத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/09I4b62
0 Comments