`ஏதோ எங்களால் முடிந்தது’ -சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போலீஸார்

மத்தியப்பிரதேசத்தில், தினமும் சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்யும் இளைஞர் ஒருவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து உதவிய போலீஸ் அதிகாரிகளின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

22 வயதாகும் ஜெய் ஹால்டே எனும் அந்த இளைஞன் மத்தியப்பிரதேசத்தில், ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு டெலிவரி செய்யும் ஓர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். குடும்பச்சூழ்நிலை காரணமாகத் தினமும் சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்து வருகிறார். ஜெய் ஹால்டேவின் இந்த நிலையைக் கண்ட இந்தூர் போலீஸ் அதிகாரிகள், அவருக்கு பைக் வாங்கிக்கொடுத்து உதவியுள்ளனர்.

மத்தியப்பிரதேச போலீஸ்

இதுகுறித்து பேசிய விஜய் நகர் காவல் நிலைய போலீஸ் அதிகாரியொருவர், ``காவல் நிலைய பொறுப்பாளர் தெஹ்சீப் காசியுடன் நாங்கள் இரவு ரோந்து பணியில் இருந்தபோது, உணவு டெலிவரி செய்வதற்காக ஒருவர் சைக்கிளில் வேகமாகச் செல்வதைக் கண்டோம். அவர் உடல் முழுதும் வியர்வையில் நனைந்திருந்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் பேசியபோது, குடும்பத்தில் இருக்கும் சில பணப்பிரச்னை காரணமாக பைக் வாங்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை என்பதை தெரிந்துகொண்டோம். பின்னர், அவருக்கு பைக் வாங்கித்தரலாம் என்று முடிவுசெய்து, தெஹ்சீப் காசி, இன்னும் சில அதிகாரிகள் சேர்ந்து, பைக் ஷோரூமில் முதற்கட்ட தவணை செலுத்தி ஜெய் ஹால்டேக்கு பைக் வாங்கிக்கொடுத்தோம். மேலும், மீதமுள்ள தவணையைத் தானே செலுக்கொள்வதாக ஜெய் ஹால்டேனே சொன்னார்" என கூறினார்.

போலீஸாரின் இத்தகைய உதவிக்கு நன்றி தெரிவித்த ஜெய் ஹால்டே. "முன்பெல்லாம் சைக்கிளில் செல்வதால் தினமும் ஆறு முதல் எட்டு உணவுப் பொட்டலங்களைத் தான் டெலிவரி செய்தேன், ஆனால் இப்போது பைக்கில் செல்வதால் இரவில் 15-20 உணவுப் பொட்டலங்களை டெலிவரி செய்கிறேன்" என்று சொன்னார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/oEAbaRl

Post a Comment

0 Comments