மத்தியப் பிரதேசத்தில் இந்து-முஸ்லிம்களுக்கிடையில் மிகப்பெரிய அளவிலான மதக்கலவரம் வெடித்தது. அந்த கலவரம் நடந்த பகுதியில் வசித்த சிறுபான்மை மதத்தவர்களின் வீடுகள், கடைகள் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதனால், எதிர்க்கட்சியினர் மத்திய அரசை புல்டோசருடன் ஒப்பிட்டு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``இந்தியாவில் பா.ஜ.க அரசின் அரசியல் அழுத்தங்களால் இதுவரை இல்லாத நெருக்கடிகளை இஸ்லாமிய மக்கள் பொறுமையாக எதிர்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்தின் சின்னமாக புல்டோசர் மாறியுள்ளது. நாங்கள் அமைதியான வழிமுறையில் போராட்டத்தை தொடருவோம்'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/hng7AMk
0 Comments