ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த 10-ம் வகுப்பு மாணவி மீது மின்விசிறி கழன்று விழுந்ததில், அந்த மாணவிக்கு முகத்தில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவியை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் அந்த மாணவி தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து பள்ளி நிர்வாகம், ``தேர்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாகவே பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன. இது ஒரு துரதிஷ்டவசமான சம்பவம். இனிமேல் ஒவ்வொரு வகுப்பறையிலும் மின்விசிறிகள் சரியாக செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்'' என்று விளக்கமளித்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/ZCv7a2Q
0 Comments