`கர்நாடக பள்ளி பாடப் புத்தகத்தில் பெரியார், பகத்சிங் குறிப்புகள் சேர்ப்பு!' - கல்வி அமைச்சர் தகவல்

கர்நாடக மாநில பாடப்புத்தகத்தில் பெரியார், நாராயண குரு குறித்த குறிப்புகள் நீக்கப்பட்டது அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர், ஹெட்கேவரின் உரைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் செயலுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். அப்போது அவர், ``கர்நாடகாவின் பாடப்புத்தகத்திலிருந்து பெரியார், சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங், சீர்திருத்தவாதி நாராயணகுரு, மைசூர் மன்னர் திப்பு சுல்தான் ஆகியோரைப் பற்றிய பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆனால் முழுவதுமாக நீக்கப்படவில்லை. திப்பு சுல்தான் பற்றிய பாடங்கள் ஒரு பக்கத்திலிருந்து ஆறு பக்கங்களாக அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. நாராயண குரு குறித்த அத்தியாயம் ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

கர்நாடக பள்ளிக்கல்வி அமைச்சர் பி.சி. நாகேஷ்

இராமன் வேத கலாசாரத்தையும், ராவணன் திராவிட கலாசாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்று பெரியார் நம்பினார். பெரியார் ராமரின் தீவிர எதிர்ப்பாளர், அதுமட்டுமின்றி இறைவன் ராமரின் புகைப்படத்துக்கு செருப்பு மாலையும் அணிவித்துள்ளார். இது போன்றவற்றை நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்பவில்லை. அதனால்தான் அவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் இறுதியாக 10-ம் வகுப்புக்கான பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்த நிலையில், பாடப்புத்தகங்களில் பகத்சிங், நாராயண குரு, பெரியார் ஆகியோரின் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன'' எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/1T5vXbC

Post a Comment

0 Comments