``ஜின்னா கோபுரத்தை `ஏ.பி.ஜே.அப்துல் கலாம்' கோபுரம் எனப் பெயர்மாற்றுங்கள்!" - பாஜக-வினர் போராட்டம்

ஆந்திராவில் சமீபத்தில் குண்டூர் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ முகமது முஸ்தஃபா ஏற்பாட்டில் ஜின்னா கோபுரத்துக்கு மூவர்ணம் பூசப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதையடுத்து, மே 24-ம் தேதி செவ்வாய்கிழமை குண்டூர் நகரில் உள்ள ஜின்னா கோபுரத்தை `ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கோபுரம்' என்று பெயர் மாற்றக் கோரி பா.ஜ.க தலைவர்கள் சிலர் பேரணியாகச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார், தேசிய செயலாளர்கள் சுனில் தியோதர், சத்ய குமார் உள்ளிட்ட பா.ஜ.க-வினரைக் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், பா.ஜ.க-வின் ராஜ்ய சபா எம்பி ஜிவிஎல் நரசிம்ம ராவ், காவல்துறையின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ``நாம் ஆந்திராவில் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் இருக்கிறோமா? என்று ஆச்சர்யமாக இருக்கிறது" என்று ட்வீட் செய்திருக்கிறார்.

பாஜக

1940-களில் கட்டப்பட்ட ஜின்னா கோபுரம், குண்டூர் மகாத்மா காந்தி சாலையில் அமைந்திருக்கும் ஒரு முக்கிய நினைவுச்சின்னமாகும். இந்­தியா சுதந்­தி­ரம் பெறு­வ­தற்கு முன்னர், அகில இந்­திய முஸ்­லிம் லீக் கட்­சி­யின் தலை­வ­ராக இருந்­த­வர் முக­மது அலி ஜின்னா. இஸ்­லா­மி­யர்­க­ளுக்­குத் தனி நாடு வேண்­டும் எனக்கோரியவர். பின்னர் நாடு இரண்­டா­கப் பிரிந்தபோது பாகிஸ்­தா­னுக்­குக் குடி­பெயர்ந்­த­வர் என்பது குறிப்பிடத்தக்கது.



from தேசிய செய்திகள் https://ift.tt/Rpj8vT2

Post a Comment

0 Comments