கர்நாடக மாநிலத்தில் வருகிற ஜூன் 3-ம் தேதி சட்டப்பேரவை மேல்சபைக்கான(எம்.எல்.சி) தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அந்த மாநில காங்கிரஸ் கட்சியானது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க கடந்த திங்கள்கிழமையன்று கூட்டம் நடத்தியிருந்தது. இந்த நிலையில், எம்.எல்.சி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில், பெண்களுக்கு உரிய அதிகாரம் அளிக்கவில்லை என கர்நாடக காங்கிரஸின் பொதுச்செயலாளரான கவிதா ரெட்டி, தன் சொந்த கட்சியான காங்கிரஸையே கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து கவிதா ரெட்டி முகநூல் பதிவில், ``எம்.எல்.ஏ, எம்.பி சீட்டு பெற்ற எல்லா ஆண்களுமே வெற்றி பெற மாட்டார்கள். எனில், வெற்றி குறித்தான கேள்வி என்பது பெண்களுக்கு மட்டும் தானா? இந்திய தேசிய காங்கிரஸ் ஏன் 50 சதவிகித மக்களைப் புறக்கணிக்கிறது. நம்முடைய சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ, பெண்களுக்கு பிரநிதித்துவம் இல்லையா? பெண்களுக்கு அனுமதி இல்லையா?" என காங்கிரஸைக் கடுமையாக சாடியிருந்தார். மேலும் இந்த பதிவில், ``பாலின நீதி இல்லாத சமூக நீதியானது முழுமையற்றது" என கவிதா ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/N5RkOaU
0 Comments