போதைப்பொருள் வழக்கு: ஆர்யன் கான் கைது முதல் 6,000 பக்க குற்றப்பத்திரிக்கை வரை! | டைம்லைன் பார்வை

சொகுசு கப்பல் பார்ட்டியில், போதைப்பொருள் பயன்படுத்தியதாக, 2021 அக்டோபர் 2-ம் தேதி ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் உட்பட 7 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.

ஆர்யன் கானை விடுவிக்க பணப்பேரத்தில் ஈடுபட்டதாக, ஆர்யன் கானை கைதுசெய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது புகார்கள் எழ, இந்த வழக்கு விசாரணையிலிருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டார். வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவுக்கு மாற்றம்.

2021, அக்டோபர் 2-ம் தேதியிலிருந்து, 20 நாள்கள் ஆர்யன் கான் சிறையில் இருந்தார்.

ஆர்யன் கான் உட்பட கைது செய்யப்பட்ட 7 பேரும், 2021, அக்டோபர் 29-ம் தேதியன்று மும்பை உயர் நீதிமன்றத்தால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தனர்.

``ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்” - மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆர்யன் கான் மனுத்தாக்கல்.

``போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் ஆர்யன் கான் எந்தவிதச் சதியிலும் ஈடுபடவில்லை" - சிறப்பு விசாரணைக்குழு அறிவிப்பு, 2022 மார்ச்.

கடந்த மார்ச்சில் இந்த வழக்கு தொடர்பாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 90 நாள்கள் அவகாசம் கேட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், 60 நாள்கள் அவகாசம் கொடுத்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

2022, மே 27, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

குற்றப்பத்திரிகையில் ஆர்யன் கான் உட்பட 5 பேர் பெயர்கள் இடம் பெறவில்லை. மேலும், ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



from தேசிய செய்திகள் https://ift.tt/alrypZg

Post a Comment

0 Comments