ஒவ்வொரு மாதமும் உறவினர்களுக்கு பணம் அனுப்பும் தாவூத் இப்ராஹிம் - எவ்வளவு தெரியுமா?

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான். தாவூத் கூட்டாளிகள் மும்பையில் ஹவாலா ஆபரேட்டர்களாகவும், போதைப்பொருள் கடத்துபவர்களாகவும் இருக்கின்றனர். அமலாக்கப் பிரிவு சமீபத்தில் மும்பையில் தாவூத் கூட்டாளிகளின் இடங்களில் ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராஹிமுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கேஷ்கரின் நண்பர் காலித் உஸ்மான் என்பவனிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியது. காலித் உஸ்மான் மூத்த சகோதரர் அப்துல் சமத் கடந்த 1990-ம் ஆண்டு தாவூத் கூட்டாளிகளுக்கும், அருண் காவ்லி கூட்டாளிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டான்.

தாவூத் இப்ராஹிம்

காலித் உஸ்மான் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ``என் சகோதரன் அப்துல் சமத்தும், இக்பால் கேஷ்கரும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். 1990-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி அருண் காவ்லி, தாவூத் இப்ராஹிம் கூட்டத்தினர் இடையே நடந்த மோதலில் என் சகோதரர் அப்துல் சமத் கொலைசெய்யப்பட்டார். அந்த நேரம் இக்பால் கேஷ்கர் துபாயில் இருந்தார். துபாயிலிருந்து வந்தவுடன் என் தாயாரைச் சந்தித்து இக்பால் கேஷ்கர் ஆறுதல் கூறினார். எப்போதெல்லாம் இக்பால் கேஷ்கர் என்னையும், என் சகோதரர் சபீர் உஸ்மானையும் சந்தித்துப் பேசுகிறாரோ அப்போதெல்லாம் நாங்களும் இக்பால் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசுவது வழக்கம். அங்கு எங்களுக்கு சாப்பாடு கொடுப்பார். அவருடன் இரண்டு மணி நேரத்தை செலவழிப்போம்.

தாவூத் இப்ராஹிம்

ஒரு முறை அப்படி சந்தித்தபோது இக்பால் கேஷ்கர், `என் சகோதரன் தாவூத் இப்ராஹிம் சகோதர சகோதரிகள் மற்றும் உறவினர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.10 லட்சத்தை தன் ஆட்கள் மூலம் அனுப்பிவைக்கிறான்' என்று தெரிவித்தார். எங்களது பகுதியில் வசிக்கும் சலீம் பட்டேல் என்பவர் தாவூத் சகோதரியிடம் டிரைவராக இருந்தார். அவர் தாவூத் சகோதரி ஹசீனாவுடன் சேர்ந்துகொண்டு தாவூத் பெயரை பயன்படுத்தி நிலத்தை அபகரித்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்" என்றும் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/fQvrhCj

Post a Comment

0 Comments