`கொரோனா காலம்; மத்திய பிரதேசத்தில் தினமும் 29 குழந்தைகள் தொலைந்து போனார்கள்!' - அதிரவைக்கும் அறிக்கை

கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் இருந்து தற்போது வரை பலவிதமான பிரச்னைகளை மக்களும், அரசும் எதிர்கொண்டு வருகிறது. பலரின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட இந்த பேரிடர் காலத்தில் வெகுவாக பாதிக்கப்படுவது, பெண் குழந்தைகள். வீட்டில், வசிக்கும் இடத்தில், படிக்கும் இடத்தில் என எங்கெங்கும் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும், பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. கொரோனா நோய்த்தொற்று ஆரம்பித்த பின், கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் மத்திய பிரதேசத்தில் ஆண்குழந்தைகளை விட ஐந்து மடங்கு அதிகமான பெண் குழந்தைகள் காணாமல் போனதாகத் தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகள் வன்கொடுமை

இந்திய அளவில் பெண் குழந்தைகளுக்கு என இயங்கி வரும் Child Rights and You (CRY) என்ற அமைப்பு, 'காணாமல் போன குழந்தைகளைப் பற்றிய அறிக்கை' என்ற ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, மத்திய பிரதேசத்தில் 2021-ம் ஆண்டில் 10,648 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டான 2020-ம் ஆண்டில், 8751 குழந்தைகள் வரை காணாமல் போனதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக NCRB யில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிக்கையின் மூலம், பெண்குழந்தைகள் காணாமல் போவது 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 26 சதவிகிதம் அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும், 2021-ம் ஆண்டில் சராசரியாக குறைந்தது 29 குழந்தைகளாவது தினமும் தொலைந்து போனதாக, CRY அறிக்கை தெரிவிக்கிறது. காணாமல் போன 10,648 குழந்தைகளில் 8,876 குழந்தைகள் பெண் குழந்தைகள் என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தியாக உள்ளது. இது, மத்திய பிரதேசத்தில் ஆண் குழந்தைகள் காணாமல் போவதை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Child abuse (Representational Image)

இந்த அறிக்கை குறித்துப் பேசியுள்ள CRY அமைப்பின் வடக்கு பகுதியின் இயக்குநர் சோஹா மொய்த்ரா, 'மத்திய பிரதேசம் பற்றி வெளியாகியுள்ள இந்த அறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு தொலைந்துபோன குழந்தைகளில் கிட்டத்தட்ட 83 சதவிகித குழந்தைகள் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த ஐந்து வருடங்களாக, காணாமல் போகும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. NCRB அறிக்கையின் படி பார்க்கும் போது 2016-ல் 65% ஆக இருந்த காணாமல் போன பெண் குழந்தைகளின் விகிதம், 2020 இல் 77% ஆக உயர்ந்திருந்தது. அதில் மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முன்னணியில் இருக்கின்றன' எனக் கூறியுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/7fSwAWG

Post a Comment

0 Comments