கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கீழரூரில், கடந்த 22-ம் தேதி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மகளிரணியின் `துர்கா வாஹினி' அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் துர்கா வாஹினியின் 200-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத ஆர்வலர்கள் ஆயுதங்களுடன் கலந்துகொண்டதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய கேரள காவல்துறை உயரதிகாரிகள், ``விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவான துர்கா வாஹினி அமைப்பினர் கடந்த மே 22 அன்று ஆயுதங்களுடன் அணிவகுப்பு நடத்தியிருக்கின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வந்தது.
அதைத் தொடர்ந்து, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு ஆயுதப் பயிற்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டுகிறது. எனவே நெய்யாற்றின் கரை அருகே உள்ள கிராமத்தில் நடத்தப்பட்ட இந்த அணிவகுப்பின் ஏற்பாட்டாளர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்தனர். ஆனால், நாங்கள் அதற்கு முன்னதாகவே தானாகவே முன்வந்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துவிட்டோம். ஆயுதம் ஏந்தி அணிவகுப்பில் கலந்துகொண்ட அடையாளம் தெரியாத 200 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
மேலும், அவர்கள்மீது 143,144, 147, 149, 153 ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/EgYK1Mz
0 Comments