மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா, அவரின் மகன் குருதத் குறித்து ஆபாசமான கருத்துகளைக் கூறியதாக நாடகக் கலைஞர் நிரஜ் குந்தர் கைது செய்யப்பட்டார். இந்த கைது தொடர்பான செய்தி சேகரிப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் ஏப்ரல் 2-ம் தேதி காவல் நிலையம் சென்றபோது, பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு அரைநிர்வாணமாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், உள்ளாடையையும் கழட்டுமாறு வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அது தொடர்பான புகைப்படம் வியாழக்கிழமை வெளியாகி சமூக வலைதளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பல அரசியல் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவரும் நிலையில்,
இது தொடர்பாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் "ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் சிறையில் தகர்க்கப்பட்டது. இதுதான் புதிய இந்தியாவா? இந்தியாவில் அரசாங்கத்தின் மடியில் அமர்ந்து அவர்களைப் புகழ்ந்து பாடலாம், அல்லது சிறைக்குச் செல்லலாம். இதுதான் புதிய இந்தியாவின் அம்சம். புதிய இந்தியா அரசாங்கம் உண்மையைக் கண்டு பயப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/GnEwv3Q
0 Comments