``காஷ்மீரி பண்டிட் மீதான தாக்குதல்; என்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர்'' - மெகபூபா முப்தி

காஷ்மீரில் ஷோபியான் மாவட்டம், சோட்டிகம் கிராமத்தில் காஷ்மீரி பண்டிட் கடைக்காரர் பால் கிருஷ்ணன் என்பவர் ஏப்ரல் 4-ம் தேதி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டார். அதில் அவர் படுகாயமடைந்த நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, வீட்டைவிட்டு வெளியே செல்ல கூடாது என தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.

மெகபூபா இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “காஷ்மீா் பண்டிட் மீதான தாக்குதலையடுத்து அவரின் குடும்பத்தினரை சந்திக்க திட்டமிட்டிருந்தேன். இதன் காரணமாக, என்னை வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். இந்திய அரசு வேண்டுமென்றே காஷ்மீர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக போலியான பிரசாரத்தை பரப்புகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர் ” என்று பதிவிட்டுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/TX4uKo2

Post a Comment

0 Comments