`பதவி போனால் என்ன; விவசாயம் இருக்கு' பதவிநீக்கம் செய்யப்பட்ட ஆந்திர துணை முதல்வரின் இயற்கை விவசாயம்

ஆந்திராவைச் சேர்ந்த பாமுலா புஷ்பா ஶ்ரீவாணி துணை முதல்வராக பதவி வகித்து வந்தவர். சமீபத்தில் ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில், ஜெகன்மோகன் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. இதில் அமைச்சரவையில் இடம்பெற்ற ஐந்து துணை முதல்வர்களில் ஒருவரான பாமுலா புஷ்பா ஸ்ரீவாணி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

பாமுலா புஷ்பா ஸ்ரீவாணி

பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு முன் மலைவாழ் மக்கள் நலத்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் ஜெகன்மோகன் அமைச்சரவையில் பணியாற்றியவர். தற்போது எம்.எல்.ஏவாக தன் பணியைத் தொடர்கிறார். பதவியிலிருந்து நீக்கப்பட்ட பாமுலா தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய வீட்டிலேயே இயற்கையான முறையில் காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார்.

தன்னுடைய வீட்டில் இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிட்டு வரும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் 'இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்' என மக்களிடம் கேட்டு கொண்டுள்ளார். 'பதவி வரும் போகும்; ஆனால் விவசாயம் நிரந்தரம்' என்றும் தெரிவித்திருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/9swOgLF

Post a Comment

0 Comments