உ.பி: ``நான் கொன்ற பாம்பின் துணை தான் என்னை கொல்ல வருகிறது” - அச்சத்தில் 7 முறை உயிர் தப்பிய விவசாயி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் ஏசான்(Ehsan) என்கிற பப்லு. விவசாய கூலி தொழில் செய்துவரும் இவர், ஏழு மாதங்களுக்கு முன்பு, தோட்டத்திலிருந்த இரண்டு பாம்புகளில் ஒரு பாம்பை அடித்துக் கொன்றுள்ளார். கொன்ற பாம்பை மண்ணில் புதைத்திருக்கிறார். இந்த நிலையில் தான், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக அவரை பாம்பு ஒன்று கொத்தியுள்ளது. உடனடியாக ஏசானை மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றினார்கள்.

விவசாயி ஏசான்

அதற்கடுத்த சில தினங்களிலேயே மீண்டும் ஏசானை பாம்பு தீண்டியுள்ளது. இப்படி ஏழு முறை அந்த பாம்பு அவரை கடித்துள்ளது. இருந்த போதிலும் ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் தப்பியுள்ளார் ஏசான். தன்னை கடிக்க வந்த பாம்பைக் கட்டையால் பலமுறை அடித்தபோதிலும் அது தப்பித்துச் சென்றுள்ளது. தான் கொன்ற ஆண் நாகத்தின் துணை தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறது என்று அவர் கூறிவருகிறார்.

பாம்பு தன்னை கொன்றுவிடுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்துவருகிறார் அவர். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ஏசானுக்கு நான்கு குழந்தைகள். தனக்கு ஏதாவது ஆனால் தன் குழந்தைகளின் நிலை மற்றும் குடும்பத்தின் நிலை என்ன ஆகும் என்று பெரும் கவலையில் உள்ளார். திரைப்பட ங்களில் வரும் கதைகளை மிஞ்சும் அளவுக்கான இந்த செய்தி தான் அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/NeTLJVD

Post a Comment

0 Comments