கொரட்டலா சிவா இயக்குகிற படங்களில் தெலுங்கு சினிமாவின் மாஸ் தூக்கலாக இருந்தாலும் ஒரு சோசியல் மெசேஜ் நிச்சயம் இருக்கும். அப்படியாக அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `ஆச்சாரியா'விலும் ஒரு சோசியல் மெசேஜ் இருக்கிறது என்கின்றனர் படக்குழு. தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்திருக்க இந்த படம் ஏப்ரல் 29-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தில் நடித்தது மட்டுமல்ல சிரஞ்சீவி எடிட் செய்வதிலும் பங்காற்றியிருக்கிறார் என்பது தான் சர்ப்ரைஸ் ஆன செய்தி. கொரட்டலா சிவா படங்களின் நீளம் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும். அவருடைய எல்லா படங்களும் குறைந்தது 2 மணி நேரம் 45 நிமிடங்கள் வந்துவிடும். இந்த படத்திலும் எடிட்டுக்கு முன்பு திரைப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ஆக இருந்தது. படத்தைப் பார்த்த சிரஞ்சீவி வெகுவாகப் பாராட்டியதோடு இன்னும் கொஞ்சம்கூட நீளத்தைக் குறைக்கலாம் என களத்தில் இறங்கிவிட்டார். நேரத்தை செலவிட்டு படத்தை 2 மணிநேரம் 34 நிமிடங்களுக்குச் சுருக்க உதவியிருக்கிறார் மெகா ஸ்டார். சிரஞ்சீவியின் பணி கொரட்டலா சிவாவுக்கு நிறைவு தரவே படம் அப்படியே ரிலீஸ் ஆகிறது.
தெலங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில் அரசு நிர்ணயித்த தொகையைவிட ஆரம்ப நாட்களில் டிக்கெட் விலையை 50 ரூபாய் அதிகரித்துக்கொள்ள அனுமதி பெற்றிருந்தது படக்குழு. இதை பற்றி பிரஸ் மீட்டில் சிரஞ்சீவியிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அதுவரை ஆர்வமாக பதிலளித்துக்கொண்டிருந்த சிரஞ்சீவி கொஞ்சம் கடுமையாக இந்தக் கேள்வியை எதிர்கொண்டார். "பிலிம் இன்ஸ்டஸ்ட்ரி கோவிட் நேரத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. பொருளாதார ரீதியில் பின்னடைவை சந்தித்தது. அரசிடம் டிக்கெட் விலையை ஏற்றிக் கொள்ள அனுமதி கேட்பதில் தவறு ஒன்றுமில்லை. அரசுக்கு 42 சதவீதம் அளவுக்கு வரி செலுத்துகிற துறை இது. அதனால் சிறிது அளவுக்கு டிக்கெட் உயர்த்திக்கொள்ள அனுமதி கேட்பது நியாயமானதே." என பதிலளித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/0bMPrZz
0 Comments