கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா பங்கேற்றார். அப்போது எம்.எல்.ஏ-விடம் குறைகளைக் கூறுவதற்காக நாகேனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்ற இளைஞர் வந்திருந்தார். அவர், ``எங்கள் ஊரில் சாலை, குடிநீர் வசதி ஆகிய அடிப்படை வசதிகள் இல்லை. எங்கள் கிராமத்திக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்'' என்றார். அதைக் கேட்டு கோபமடைந்த எம்.எல்.ஏ அவரைப் பார்த்து தகாத வார்த்தையில் திட்டியதோடு, அவர் கன்னத்தில் அறைந்தார். இது குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகப் பரவியது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ``கர்நாடகாவில் உள்ள ஒரு இளைஞர் தன் கிராமத்தில் இருந்த தண்ணீர் பிரச்னையை தனது தொகுதி எம்.எல்.ஏ-விடம் கேட்க முயன்றார். அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ வெங்கடரமணப்பா பிரச்னையைக் கேட்காமல், அவரை கன்னத்தில் அறைந்தார். குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை காங்கிரஸ் இப்படித்தான் தீர்க்கிறது'' எனப் பதிவிட்டிருக்கிறது.
from தேசிய செய்திகள் https://ift.tt/aKjtxbh
0 Comments