தொடர்ந்து 10 நாள்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டிருக்க, இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துவருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி குறித்தும், காங்கிரஸின் தற்போதைய தலைமை குறித்தும் கடுமையாகச் சாடினார்.
அப்போது பேசிய அனுராக் தாகூர், ``காங்கிரஸ் கட்சி சோனியா காந்தி குடும்பத்தைத் தாண்டி வெளியே எதையும் பார்ப்பதில்லை. முன்னர் கட்சியில் ராகுல் காந்தி தலைமைப் பொறுப்பேற்றார். ஆனால், மேற்கு வங்கத்தில் காங்கிரஸுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.
அடுத்து உத்தரப்பிரதேச தேர்தலில் பிரியங்கா காந்தி பொறுப்பேற்றார், அங்கும் டெபாசிட்டை இழந்து வெறும் 2 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றது. தற்போது மீண்டும் சோனியா காந்தியே கட்சியில் தலைமைப் பொறுப்பேற்றுள்ளார். காங்கிரஸில் என்ன நடக்கிறது? அவர்கள் தங்களை ஒரு குடும்பத்திற்குள் மட்டுமே கட்டுப்படுத்துவார்களா என்ற கேள்வி பல ஆண்டுகளாக மாறாமல் இன்னும் நீடிக்கிறது" என காங்கிரஸைச் சாடினார்.
முன்னதாக இன்று நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ``வரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி முன் எப்போதும் இல்லாத அளவில் சவால்களை சந்திக்கவுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் பிரித்தாளும் சூழ்ச்சியை பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது. எனவே கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஒற்றுமை மிக முக்கியம்" எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/V8v62nN
0 Comments