நடிகர் சல்மான் கான் அடிக்கடி சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அப்படி ஒருமுறை சென்றபோது, சிலர் அவருடன் போட்டோ எடுக்க முயன்றனர். உடனே கோபமடைந்த சல்மான் கான் செல்போனைப் பிடுங்கிக் கொண்டு அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகையாளர் அசோக் பாண்டே என்பவர், மொபைல் போனை சல்மான் கான் பிடுங்கியதாகக் கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரோட்டில் சல்மான் கான் சைக்கிளில் சென்றபோது யாரோ ஒருவர் புகைப்படம் எடுக்க முயன்றதற்கு எனது போனை சல்மான் கான் பிடுங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தன்னை மிரட்டியதாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த கோர்ட் இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய டி.என்.நகர் போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. புகாரை ஆய்வு செய்தபோது குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக விசாரிப்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருப்பதாக மாஜிஸ்திரேட் கோர்ட் தெரிவித்துள்ளது. விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும். மாஜிஸ்திரேட் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சல்மான் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் சல்மான் கான் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டது.
மேலும், மே 5-ம் தேதி வரை இந்தத் தடை நீடிக்கும் என்றும், சல்மான் கான் மீது புகார் செய்தவர் 4 வாரங்களில் பதில் மனுத்தாக்கல் செய்யும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சல்மான் கான் தனது வாழ்க்கையில் ஏராளமான வழக்குகளை சந்தித்திருக்கிறார். மும்பையில் குடிபோதையில் கார் ஓட்டி சாலையோரம் உறங்கியவர்கள் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் சல்மான் கான் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
from தேசிய செய்திகள் https://ift.tt/2sO5Z6h
0 Comments