``பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த தயாராக இருக்கிறோம்!” - இமாச்சல் முதல்வர் ஜெய்ராம்

பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த தயாராக உள்ளதாக அறிவித்திருந்தன. 

உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங்

இது தொடர்பாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் முன்னதாக, "பொது சிவில் சட்டம் ஒரு நல்ல நடவடிக்கை. அதை அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா."இந்தியா முழுவதும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை அமைக்க மத்திய அரசு முயற்சிக்கும்.

அனைவரும் ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை வரவேற்க வேண்டும். உத்தரப்பிரதேச அரசும் இந்த திசையில் தான் சிந்திக்கிறது. நாங்கள் அதற்கு ஆதரவாக இருக்கிறோம், உத்தரப்பிரதேச மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு இது அவசியம். பாஜகவின் முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று" எனக் கூறினார்.

இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர்

இந்த நிலையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக இமாச்சல் மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "மாநில அரசு பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் அவரச முடிவெடுக்கமாட்டோம். அதன் முடிவைத் தொடர்ந்து ஆராய்ந்து அதன் பின் தொடருவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/PoJuiAj

Post a Comment

0 Comments