கர்நாடகாவில், ஹிஜாப் பிரச்னையைத் தொடர்ந்து, இந்துக் கோயில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, ஹலால் விவகாரம், முஸ்லிம் நகைக்கடையில் இந்துக்கள் நகை வாங்கக்கூடாது என, இந்து-முஸ்லிம் இடையே தொடர்ச்சியாக வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், `இந்துக்கள் பண்டிகையின்போது ஒரு கல் எறியப்பட்டால், முஸ்லிம்கள் மீது 1,000 கற்கள் எறியப்படும்!' என ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியிருப்பது கர்நாடகாவில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய பிரமோத் முத்தாலிக், ``இனி கர்நாடகாவில் மட்டுமல்ல, நாட்டின் எந்த மூலையாக இருந்தாலும், ராம நவமி, அனுமன் ஜெயந்தி, விநாயக சதுர்த்தி அல்லது இந்துக்களின் எந்தவொரு பண்டிகையின்போதும், இந்துக்கள் மீது ஒரு கல் எறியப்பட்டாலும், பதிலுக்கு முஸ்லிம்கள் மீது 1,000 கற்கள் எறியப்படும். கடவுள் நமக்கும் இரண்டு கைகள் கொடுத்திருக்கிறார், எச்சரிக்கையாக இருங்கள்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரமோத் முத்தாலிக், ``பசுக்களைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் சிறைக்குச் சென்றால், உங்கள் விடுதலைக்கு நாங்கள் போராடுவோம். மதமாற்றத்தில் ஈடுபடும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நீங்கள் போராடுவதன் மூலம் உங்கள் மீது வழக்குகள் பதியப்பட்டால், நாங்கள் உங்களுக்கு ஆதரவளிப்போம்" எனக் கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/8N7at1p
0 Comments