இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஹிஜாப் விவகாரத்தில், ``ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானது அல்ல" என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து, பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் ஹிஜாப் அணிந்து வருவது அரசால் தடை செய்யப்பட்டது. இதற்கு இஸ்லாமியர்கள் தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும், பள்ளிகளில் பொதுத் தேர்வின்போது ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் அனுமதிக்காததால், ஏராளமான முஸ்லிம் மாணவிகள் தேர்வையும் புறக்கணித்தனர். இந்த நிலையில், கர்நாடக தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ், ``வகுப்பறைக்குள் ஹிஜாப் அணியக்கூடாது என்ற அரசின் கோரிக்கையை பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர்" என்று பேசியுள்ளார்.
தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ-யிடம் நேற்று பேசிய பி.சி.நாகேஷ், ``பள்ளிகளில் சீருடைகளை நாங்கள் கட்டாயமாக்கியுள்ளோம். வகுப்பறைக்குள் மாணவர்கள் எப்படி வருகிறார்கள் என்பதைக் கவனிப்பது ஆசிரியர்களின் முக்கிய கடமை. பள்ளிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணிவதை நாங்கள் தடை செய்துள்ளோம். ஆனால் பல குழந்தைகள், வகுப்பறைக்குள் ஆசிரியர்கள் ஹிஜாப் அணிந்து வருகிறார்கள் என்று கேள்வியெழுப்புகிறார்கள். எனவே வகுப்பறையில் மாணவர்கள் முன் ஆசிரியர்கள் இருப்பார்கள் என்பதால், அவர்களை(ஆசிரியர்கள்) அதை செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொண்டோம். அரசின் இந்த கோரிக்கையை பெரும்பாலான ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டனர். சில ஆசியர்கள் மட்டுமே ஹிஜாப் வேண்டும் என்கிறார்கள். நாங்கள் அவர்களை வற்புறுத்தவில்லை. தேர்வுப் பணிக்கு அவர்கள் வரலாம், வராமலும் போகலாம்" என்று கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/eU7WlHr
0 Comments