கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்திய தொழிலதிபர் கிரண் மஜும்தார் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாகக் கருத்துப் பதிவிட்டிருக்கிறார்.
பயோகான் தலைவர் கிரண் மசூம்தார்-ஷா நேற்றைய தினம் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையைத் தனது ட்விட்டரில் டேக் செய்து, ``கர்நாடகம் எப்போதுமே உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்கியுள்ளது, இதுபோன்ற வகுப்புவாதத்தை நாம் அனுமதிக்கக் கூடாது. இது வகுப்புவாதமாக மாறினால் அது நமது உலகளாவிய தலைமையை அழித்துவிடும். வளர்ந்து வரும் இந்த மதப் பிளவை பசவராஜ் பொம்மை தயவு செய்து தீர்க்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கிரண் மசூம்தார்-ஷா பல ட்விட்டர் பயனாளர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார். அதில் இந்துக் கடைக்காரர்கள் மசூதிகளுக்கு வெளியே கடை வைக்க அனுமதிக்கப்படுகிறார்களா என்று ட்விட்டர் பயனர் ஒருவர் கேட்டதற்கு மசூம்தார்-ஷா, "பெங்களூரு முழுவதும் உள்ள மசூதிகளுக்கு அருகில் பல இந்துக் கடை உரிமையாளர்களை நான் பார்த்திருக்கிறேன். மேலும், எப்போது முதல் நாம் மதத்தின் அடிப்படையில் கடை உரிமையாளர்களை அடையாளம் காண ஆரம்பித்தோம்?" எனக் கேள்வி எழுப்பினார்.
கிரண் மஜும்தார் ஷா-வின் பதிவுக்கு பா.ஜ.க தலைவர் அமித் மல்வியா, ``கிரண் ஷா போன்றவர்கள் தங்களுடைய தனிப்பட்ட, அரசியல் சாயலான கருத்தைத் திணிப்பதும், ITBT துறையில் இந்தியாவின் தலைமையுடன் அதைக் குழப்புவதும் துரதிர்ஷ்டவசமானது" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/TVxAtCB
0 Comments