பாலிவுட்டில் சில படங்களில் நடித்திருப்பவர் ரிமி சென். இவர் சொந்தமாக படங்கள் தயாரிக்கும் கம்பெனியையும் மும்பையில் நடத்தி வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரிமி சென் அந்தேரியில் உள்ள ஜிம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தார். அங்கு அவருக்கு ரோனக் ஜெடின் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டனர். இருவரும் நண்பர்களானதும் ஜெடின் தான் புதிதாக எல்இடி பல்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கப்போவதாக தெரிவித்தார். அதோடு நீங்களும் அதில் பங்குதாரராக இருக்கலாம் என்று ரிமியிடம் தெரிவித்தார். உடனே அவரின் கம்பெனியில் ரிமி சென் ரூ.4.4 கோடியை முதலீடு செய்தார். இதற்காக இருவரும் ஒப்பந்தமும் செய்து கொண்டனர்.
தொழிலில் 40 சதவீதம் அளவுக்கு லாபம் கிடைக்கும் என்று ஜெடின் நடிகையிடம் ஆசை வார்த்தை கூறினார். அதனை நடிகை ரிமி நம்பினார். ஜெடின் சொன்ன காலம் முடிந்ததால் கம்பெனியின் லாபத்தை தனக்கு கொடுக்கும்படி ரிமி ஜெடினிடம் கேட்டார். ஆனால் பணத்தை கேட்டதும் ஜெடின் நடிகை ரிமியின் போன் கால்களுக்கு மதிலளிக்காமல் புறக்கணித்து வந்திருக்கிறார். அதன் பிறகுதான் ஜெடின் எல்இடி கம்பெனியே ஆரம்பிக்கவில்லை என்றும், பணத்தை ஏமாற்றி விட்டதாகவும் நடிகைக்கு தெரிய வந்தது. இதையடுத்து போலீஸில் நடிகை ரிமி புகார் செய்தார். அதன் அடிப்படையில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஜெடின் தற்போது தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். ரிமியின் மேனேஜரிடம் இது குறித்து கேட்டதற்கு, வழக்கு விசாரணையில் இருப்பதால் இது குறித்து கருத்து சொல்ல முடியாது என்று தெரிவித்தார்
from தேசிய செய்திகள் https://ift.tt/od72H4R
0 Comments