4,000 ஏக்கரில் இயற்கை விவசாயம்; கர்நாடக அரசின் புதிய திட்டம்!

மகசூலைப் பெருக்குவதற்காக ரசாயன உரங்களும், பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடும் விவசாயத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப் படுவதோடு, பல ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் உண்டாகின்றன. எனவே, இயற்கை முறையில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் முதன்முறையாக 4,000 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்ய உள்ளதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இயற்கை விவசாயம்

இந்த 4,000 ஏக்கரில், வேளாண் பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள 1,000 ஏக்கர் முதற்கட்டமாக ஆராய்ச்சிக்குப் பயன் படுத்தப்பட உள்ளது.

கர்நாடக வேளாண்மைத் துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் தெரிவிக்கையில், ``ரசாயன உரங்களுக்குப் பதிலாக இலைகள், மாட்டுச் சாணம், வேம்பு, இயற்கையாகக் கிடைக்கும் பொருள்கள் பயன்படுத்தப்படும். ஆராய்ச்சியின் முடிவில், இயற்கை விவசாய முறைகளை விவசாயிகளுக்கும் கற்றுத்தரப்படும். வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் அதிக நிலப்பரப்பு உள்ளதால், ஒவ்வொரு வளாகத்திலும் 1,000 ஏக்கரில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட பகுதிகளில் தட்பவெப்பம், நீரின் இருப்பைப் பொறுத்து பயிர்கள் உருவாக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/Ax4Sn9g

Post a Comment

0 Comments