வைரல் வீடியோ: சுங்கக் கட்டணம் கேட்டு லாரி பம்பரில் ஏறிய ஊழியர்.. அப்படியே 10 கி.மீ இயக்கிய ஓட்டுநர்!

ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடியில் சீனிவாசலு என்பவர் வேலை செய்து வருகிறார். இன்று ஹரியானா மாநில லாரி ஒன்று ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டம் அகமத்தாடு வழியாகச் சென்றது. அப்போது அங்கிருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளது.

இதைக் கவனித்த சீனிவாசலு அந்த லாரியின் முன் பகுதி பம்பரில் ஏறிக்கொண்டு லாரியை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் லாரி ஓட்டுநர் நிறுத்தாமல் வேகமாகச் சென்றிருக்கிறார். ஏறத்தாழ 10 கிலோமீட்டர் வரை லாரி வேகமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது. உடனே நிலையைச் சுதாரித்த சுங்கச்சாவடி ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளனர்.

மேலும், நெடுஞ்சாலை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை லாரியை மடக்கிப் பிடித்து ஊழியரை மீட்டு, அந்த லாரி ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/N57Krv1

Post a Comment

0 Comments