`இயற்கை வேளாண்மையில் சிறந்த கிராமம்' விருது; கேரளாவின் கொட்டுவள்ளி சாதித்தது எப்படி?

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொட்டுவள்ளி கிராம பஞ்சாயத்தை இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் கிராமமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அறிவித்துள்ளது.

இயற்கை வேளாண்மை(File Pic)

அதாவது, இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 2021-லிருந்து கொட்டுவள்ளி கிராம பஞ்சாயத்து மக்கள் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான அங்கீகாரம் தற்போது இவர்களுக்கு கிடைத்ததோடு, பரிசுத் தொகையாக  3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க கிராமத்தில் உள்ள அனைவரையும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் இதர அலுவலர்கள் பொக்காலி நெல் சாகுபடி செய்வதை ஊக்குவித்துள்ளனர். அதேபோன்று காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பதையும் ஊக்குவித்துள்ளனர். விவசாயிகள், அரசு வேளாண்மை துறையினர், கிராம மக்கள் என அனைவரும் இயற்கை  விவசாயத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த அணுகுமுறைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களைச் சந்தைப்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. 

இயற்கை விவசாயம் (File Pic)

மாவட்டத்தில் காய்கறி சாகுபடியில் சிறந்த முறைகளை கடைப்பிடித்த சிறந்த தனியார் நிறுவனமாக  கூனம்மாவு செயின்ட் ஜோசப் ஆண்கள் விடுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. காய்கறிகளை பயிரிடும் சிறந்த கல்வி நிறுவனமாக சாவர தர்ஷன் சிஎம்ஐ பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/oSnqubz

Post a Comment

0 Comments