கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையைத் தொடர்ந்து,பண்டிகை சமயங்களில் இந்து கோயில்களைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் கடை போட இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்கப்பட்டது சர்ச்சையானது. இதையொட்டி தற்போது ஹலால் பற்றி பாஜக தேசிய பொதுச்செயலாளர் தெரிவித்திருக்கும் கருத்து புது சர்ச்சை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் சி.டி.ரவி, ``ஹலால் இறைச்சி உணவை இந்துக்களும் பயன்படுத்த வேண்டும் என்று முஸ்லீம்கள் நினைக்கும் போது, அந்த உணவை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது?. முஸ்லீம்கள் ஹலால் இல்லாத இறைச்சியை பயன்படுத்தினால், இந்துக்களும் ஹலால் இறைச்சியை பயன்படுத்துவார்கள். முஸ்லிம்கள் மற்ற மதத்தினரிடம் வியாபாரம் செய்வதைத் தடுக்க இந்த ஜிஹாத் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது'' என்றார்.
இவரின் சர்ச்சை பேச்சை கண்டித்த, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹச்.டி.குமாரசாமி, '' இந்த பிரசாரம் மாற்று மதத்தினரின் நம்பிக்கையைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. மேலும் மாநிலத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/BAoOLDr
0 Comments