மும்பை பிரபாதேவி பகுதியில் வசிப்பவர்கள் ராஜ் சிங், மணீஷ் பாட்டீல். அங்குள்ள குறுகலான தெருவில் இருவரும் பைக்கில் எதிரெதிரில் இருந்து வந்தனர். இதில் பாட்டீல் பைக்கை மிகவும் வேகமாக ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் ராஜ் சிங் பைக் மீது பாட்டீல் பைக் மோதிக்கொண்டது. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பாட்டீல், `இங்கேயே இரு உன்னை என்ன செய்கிறேன் பார்?’ என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இதனால் ராஜ் சிங் உதவிக்கு தனது உறவினர் ராம் கணேஷ் சிங்கிற்கு போன் செய்து நிலைமையை எடுத்து சொல்லி வரும்படி கேட்டுக்கொண்டார். உடனே சம்பவ இடத்திற்கு ராம் கணேஷ் சென்றார். அங்கு ஏற்கனவே பாட்டீல் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தார். இருவருக்கும் இடையில் நடந்த சண்டையை ராம் கணேஷ் தடுத்து நிறுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த பாட்டீல் தன்னிடம் இருந்த கத்தியால் ராம் கணேஷ் மற்றும் ராஜ் ஆகிய இரண்டு பேரையும் குத்தினார்.
இதில் ராம் கணேஷ் வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் பைக்கில் கேஇஎம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர். கத்திக்குத்தில் அவரது கல்லீரல் சேதம் அடைந்திருந்தது. இதனால் இரண்டு நாள் சிகிச்சை பலனளிக்காமல் ராம் கணேஷ் இறந்துபோனார்.
ராம் கணேஷ் மகாராஷ்டிரா மாநில அளவில் நடந்த கபடிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி இருக்கிறார். இறுதியில் பில்டர் ஒருவரிடம் பாதுகாவலராக வேலை செய்து வந்தார். அதோடு கடந்த மூன்று மாதத்திற்கு முன்புதான் ராம் கணேஷுக்கு பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் திருமணமும் நடந்தது. புதிதாக வாழ்க்கையை தொடங்கியவர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. பெண் கான்ஸ்டபிளுக்கு போலீஸ் குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது. அங்கு குடியேற திட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
from தேசிய செய்திகள் https://ift.tt/VUlPiMQ
0 Comments