ஜம்மு காஷ்மீர்: பாதுகாப்பு முகாம் மீது பெட்ரோல் குண்டு வீசிய பெண்! - அதிர்ச்சி வீடியோ

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) பாதுகாப்பு முகாம் மீது பர்தா அணிந்த பெண் ஒருவர் நேற்று வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்தான காட்சி அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த பதிவில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் நடுரோட்டில் தன்னுடைய பணப்பையைத் தேடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த பெண் பையிலிருந்து வெடிகுண்டை எடுத்து சிஆர்பிஎஃப் முகாமின் மீது வீசினார். அதைத் தொடர்ந்து, அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

இந்தநிலையில், காஷ்மீர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் விஜய் குமார் இது குறித்துக் கூறியதாவது, ``அந்த பெண் வீசிய வெடிகுண்டு, பாதுகாப்பு முகாமுக்கு வெளியே விழுந்தது. அதனால் எந்த இழப்பும், காயமும் ஏற்படவில்லை. தாக்குதலுக்குப் பிறகு அந்தப் பகுதி உடனடியாக சுற்றி வளைக்கப்பட்டது.போலீஸார் அந்த பெண்ணை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் விரைவில் கைது செய்யப்படுவார் '' என்றார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/YipSboM

Post a Comment

0 Comments