அணை விவகாரம்: தமிழக அரசின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றிய கர்நாடகா!

காவிரி நதிநீர் பங்கீடு விஷயத்தில் கர்நாடகாவுக்கும் தமிழகத்துக்கும் இடையே பல வருடங்களாக பிரச்னை நிலவி வருகிறது. நடந்து முடிந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேக்கே தாட்டூவில் அணைக் கட்டுவதற்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

அவர் கொண்டு வந்த அந்த தீர்மானத்தில், ``நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவைப் பெறாமல் மத்திய அரசின் எந்தவித அனுமதியையும் பெறாமல் தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேக்கே தாட்டூவில் அணைக் கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சட்டமன்றம்

கர்நாடக அரசின் இந்தச் செயலுக்கு இந்த மன்றம் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடாத அணையை மேக்கே தாட்டூவில் கட்ட கர்நாடக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கேட்டுக்கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து தமிழக விவசாயிகள் நலனை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பேரவை தனது ஆதரவை அளிக்கும் என்று ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கர்நாடகா சட்டமன்றம்

இந்த தீர்மானத்துக்கு தமிழக காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்டு ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில், கர்நாடக பா.ஜ.க அரசு அந்த மாநில சட்டப்பேரவையில் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்துக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.



from தேசிய செய்திகள் https://ift.tt/WBGTim2

Post a Comment

0 Comments