உ.பி: யோகி அமைச்சரவையில் நிஷாத் கட்சி... நேரில் வாழ்த்திய தமிழக மீனவப் பிரதிநிதிகள்!

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவையில் நிஷாத் கட்சியின் சஞ்சய் நிஷாந்த் இடம்பெற்றுள்ளதற்கு தமிழக மீனவர் அமைப்பினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

சஞ்சய் நிஷாந்த்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னதம்பி, "தமிழக மீனவர்களின் பிரச்னையை மத்திய அரசுக்கு கொண்டு செல்ல உதவியவர் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாந்த். இவர் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர், உள்நாட்டு மீனவர்கள் மற்றும் கடல்புற மீனவர்கள் நலனுக்காக கட்சி நடத்தி வருகிறார்.

உ.பி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று தற்போது கேபினட் அமைச்சராக பதவியேற்றுள்ளார். அவரை நேரில் சென்று வாழ்த்தினோம். விரைவில் மத்திய மீன்வளத்துறை அமைச்சரை அழைத்துக்கொண்டு தமிழக மீனவர் பிரச்னையை தீர்க்கும் வகையில் மீனவர்களை சந்திக்க ராமேஸ்வரம் வருவதாக தெரிவித்துள்ளார்." என்றார்.

சஞ்சய் நிஷாந்த் - சின்னதம்பி

நிஷாத் கட்சியின் தமிழக நிர்வாகி பிரவீன்குமார் பரதவர் விடுத்துள்ள அறிக்கையில், "உத்தரப்பிரதேச அமைச்சரவையில் மீனவ தலைவனுக்கு கேபினட் மந்திரி பதவி கிடைத்துள்ளது.

தலைவர் சஞ்சய் நிஷாந்த் தமிழக மீனவர்களுக்கு அளித்துள்ள செய்தியில், தேர்தலில் நிஷாத் கட்சி வெற்றி பெற்றதற்கும், அமைச்சராக பதவியேற்றதற்கும் நேரிலும், தொலைபேசி மூலமாகவும் வாழ்த்துக்களை தெரிவித்த தமிழகத்தை சேர்ந்த மீனவ உறவினர்கள் அனைவருக்கும் நன்றி.

சஞ்சய் நிஷாந்துடன் தமிழக மீனவ அமைப்பினர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறோம். கடலோர மீனவர்கள் மற்றும் உள்நாட்டு மீனவர்கள் என்னை சந்தித்து தீர்க்கப்படாத பல பிரச்னைகளை முறையிட்டுள்ளனர். மீனவர்களின் குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வு காண மத்திய அரசை ஒருங்கிணைத்து தகுந்த நடவடிக்கை எடுக்க எனது தலைமையிலான குழு விரைவில் தமிழகம் வரவுள்ளதாக தெரிவித்துள்ளார், என பிரவீன்குமார் பரதவர் தெரிவித்துள்ளார்.

உ.பி-யில் அமைச்சராக பொறுப்பேற்ற வட மாநிலத் தலைவருக்கு தமிழக மீனவப் பிரதிநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்திருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/8L4mQpk

Post a Comment

0 Comments