``ஹிஜாப் ஆடை பற்றியதல்ல... பெண்களின் உரிமையைப் பற்றியது" - உமர் அப்துல்லா காட்டம்!

இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் ஹிஜாப் விவகாரம் தொடர்பாகக் கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ``ஹிஜாப் தடைக்கு எதிராகச் சரியான முகாந்திரங்கள் முன்வைக்கப்படவில்லை. ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதும் அல்ல" எனக் கூறி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஹிஜாப்

இந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த தீர்ப்பு தொடர்பாக மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ``கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஹிஜாப் என்பது ஒரு ஆடை பற்றிய விஷயம் மட்டுமல்ல. அது ஒரு பெண் எத்தகைய ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதைத் தேர்ந்தெடுக்கும் அந்தப் பெண்ணின் உரிமையைப் பற்றியது. ஆனால், இந்த அடிப்படை உரிமையை நீதிமன்றம் நிலைநாட்டத் தவறியது கேலிக்கூத்து'' என்று பதிவிட்டிருக்கிறார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/LdNjlct

Post a Comment

0 Comments