உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, பகுஜன்சமாஜ் ஆகிய கட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மார்ச் 7-ம் தேதி நடைபெறும் இறுதிக் கட்ட தேர்தலில் 10 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய அசம்கர் பகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
ஜலால்பூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க அரசு இட ஒதுக்கீட்டை ஒழிக்கச் சதி செய்து வருகிறது. இதன் மூலமாக அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கிறது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அம்பேத்கர்நகர் மற்றும் அசம்கர் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் எங்கள் கட்சி வெற்றி பெறும். நடந்து முடிந்த ஐந்து கட்ட தேர்தல்களில், மக்கள் பா.ஜ.க-வை நிராகரித்துவிட்டனர். மேலும் ஆறாவது கட்டம் வரும்போது, பா.ஜ.க அழிந்துவிடும் என்பது உறுதியாகிவிடும். சமாஜ்வாடி கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது. பல பா.ஜ.க தலைவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து பா.ஜ.க கொடிகளைக் கழற்றத் தொடங்கியுள்ளனர்'' என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/6icNZ32
0 Comments