மும்பை கோரேகாவ் பகுதியில் எஸ்.பி.ஐ.வங்கிக்கு மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் ஏ.டி.எம். சென்டர் ஒன்று இருக்கிறது. இந்த ஏ.டி.எம்.சென்டரில் தீடீரென தீப்பிடித்துக்கொண்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து விரைந்து சென்றனர். ஆனால் இதில் ஏ.டி.எம்.சென்டர் முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. வங்கி அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வந்தனர். ஏ.டி.எம்.சென்டரில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது ஏ.டி.எம். சென்டருக்கு தீ வைக்கப்பட்ட காட்சிகள் மட்டும் மாயமாகி இருந்தது.
அதோடு ஏ.டி.எம்.மெஷினுக்குள் பணம் வைக்கும் அறை தீவிபத்துக்களால் பாதிக்கப்படாத பகுதியாகும். அந்த அறையை டெக்னீசியன் மூலம் திறந்து பார்த்த போது ஒரு சில ரூபாய் நோட்டுக்கள் மட்டும் எரிந்த நிலையில் கிடந்தது. எஞ்சிய நோட்டுக்கள் எரிந்ததற்கான அடையாளமோ அல்லது அவற்றின் சாம்பலோ அங்கு கிடைக்கவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த அதிகாரிகள் ஏ.டி.எம்.மெஷினை பராமரிக்கும் ஊழியர்களை தேடிய போது அவர்கள் கிடைக்கவில்லை. பிரவின், ரிதிக் மற்றும் ராகுல் ஆகியோர் தலைமறைவாகி இருந்தனர்.
ஏ.டி.எம்.மெஷினில் எவ்வளவு பணம் நிரப்பப்பட்டது என்ற விபரம் மெஷினில் பதிவாகி இருக்காது. ஆனால் அதில் பணம் நிரப்புபவரிடம் அத்தகவல் இருக்கும். ஏ.டி.எம்.மெஷினில் எவ்வளவு பணம் இருந்தது என்ற விபரத்தை தெரிந்து கொள்ள மெஷினில் பணம் நிரப்பும் ராகுலை வங்கி அதிகாரிகள் தேடிய போது அவரும் தலைமறைவாக இருந்தார். அவருக்கு ஏ.டி.எம். பாஸ்வேர்டு தெரியும். அதனை பயன்படுத்தி ராகுல் மற்ற இருவருடன் சேர்ந்து ஏ.டி.எம்.மெஷினில் இருந்த ரூ.77 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். போலீஸாரின் விசாரணையை திசை திருப்ப ஏ.டி.எம்.சென்டருக்கு தீவைத்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து மூன்று பேர் மீதும் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் தேடி வருகின்றனர். இந்த கொள்ளையில் வேறு ஊழியர்கள் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/WcHICUN
0 Comments