`அரசியல்வாதிகளின் வீடுகளே குறி..' -உ.பி-யில் 35 நாள்கள் தங்கி கொள்ளையனைக் கைது செய்த மும்பை போலீஸார்

மும்பை காந்திவலி பகுதியில் வசிப்பவர் கவுரவ் கேதன் ஷா. இவரது வீட்டில் ராம்குமார் என்பவர் கடந்த ஜனவரி மாதம் வீட்டு வேலைக்காக சேர்ந்தார். வீட்டில் கேதன் ஷாவின் தாயார் தனியாக இருந்தபோது, வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு ராம்குமார் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து கவுரவ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ராம்குமார் கொடுத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில், முகவரிக்குச் சென்று பார்த்தபோது அது போலியானது என்று தெரியவந்தது. அதையடுத்து ராம்குமாரின் செல்போன் உரையாடல்களை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.

பாண்டே

அப்போது ராம்குமார் அடிக்கடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நபருடன் போனில் பேசியிருப்ப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீஸார் உத்தரப்பிரதேசத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் கொள்ளையனைப் பிடிக்க 35 நாள்கள் தங்கி இருந்தனர். மும்பை போலீஸார் அங்கு உள்ளூர் போலீஸாரின் உதவியோடு ராம்குமாருக்கு அடிக்கடி போன் செய்பவரை பிடிக்க முயன்றனர். பின்னர், போன் உரையாடல்களை கண்காணித்து அந்த நபர் பதுங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் ஜவஹர் பாண்டே(35) என்றும், மும்பையில் நடந்த திருட்டுக்கு முக்கியக் காரணம் என்றும் தெரியவந்தது. அதோடு 2010-ம் ஆண்டிலிருந்து ஹரியானா, சண்டிகர், அமிர்தசரஸ் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறுப் பகுதிகளில் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் வீடுகளைக் குறி வைத்து ஜவஹர் பாண்டே திருட்டில் ஈடுபட்டு வந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர். ஜவஹர் பாண்டே மும்பையிலும் அரசியல்வாதிகளின் வீடுகளில் திருட திட்டமிட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பாண்டேவிடமிருந்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள தங்க மற்றும் வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் மும்பை தொழிலதிபர் வீட்டில் திருடப்பட்டது என்று போலீஸார் தெரிவித்தனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/hLGvZ5n

Post a Comment

0 Comments