மும்பை அருகில் உள்ள டோம்பிவலியை சேர்ந்தவர் கிஷோர். இவரின் மனைவி சுப்ரியா ஷிண்டே. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் இருக்கிறார். கிஷோர் வீட்டின் பக்கத்து கட்டடத்தில் வசிக்கும் விஷால் காவத்(25) என்ற வாலிபருடன் நல்ல அறிமுகம் இருந்தது. அடிக்கடி விஷால், கிஷோர் வீட்டிற்கு வருவது வழக்கம். அப்போது, கிஷோர் மனைவி மீது ஆசை கொண்டதாக கூறப்படுகிறது. இரண்டு நாள்களுக்கு முன்பு சுப்ரியா ஷிண்டே தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக செல்லவில்லை. இது குறித்து பக்கத்து வீட்டுக்காரர்கள் கிஷோருக்கு போன் செய்து தெரிவித்தனர். உடனே கிஷோர் தனது மனைவிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் போன் எடுக்கப்படவில்லை. உடனே வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக அடைக்கப்பட்டு இருந்தது. தன்னிடமிருந்த மாற்று சாவி மூலம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிற்குள் ஷிண்டே இல்லை.
ஷோபாவிற்குள் உடல்
இதனால் தனக்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துப்பார்த்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு சென்று கிஷோர் புகார் செய்தார். அவருடன் விஷாலும் சென்று போலீஸில் புகார் செய்ய உதவினார். இந்நிலையில் வீட்டில் இருந்த ஷோபா கம் பெட் சற்று உயர்ந்த நிலையில் இருந்ததை பார்த்து சந்தேகப்பட்டு அதனை தூக்கி பார்த்த போது, உள்ளே சுப்ரியா ஷிண்டே கொலை செய்யப்பட்டு உள்ளே வைக்கப்பட்டு இருந்தார். உடலை கைப்பற்றிய போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கிஷோர் வசித்த கட்டத்திற்கு அருகில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லை. இதனால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
காட்டிக்கொடுத்த செருப்பு
பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விசாரித்தபோது கொலை நடந்த அன்று சுப்ரியா வீட்டிற்கு வெளியில் ஒரு ஜோடி செருப்பு கிடந்ததாக தெரிவித்தனர். அதே செருப்பு இதற்கு முன்பும் கிடந்ததாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிஷோரை பிடித்து விசாரித்தனர். ஆரம்பத்தில் தனக்கு இக்கொலையில் தொடர்பு இல்லை என்று சொன்ன கிஷோர், பின்னர் ஒத்துக்கொண்டார். இது குறித்து மான்பாடா போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் கூறுகையில், ``குற்றவாளி கொலை நடப்பதற்கு முதல் நாள் சுப்ரியா வீட்டிற்கு வந்து அவர்களின் மகன் எப்போது பள்ளிக்கு சென்றுவிட்டு வருவான் என்பது போன்ற சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். அதோடு சுப்ரியாவிற்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்தது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தன்னிடம் புத்தகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். சொன்னபடி மறுநாள் அதாவது கொலை நடந்த தினத்தன்று சுப்ரியா வீட்டிற்கு கிஷோர் வந்துள்ளார்.
வன்கொடுமைக்கு முயற்சி:
வீட்டில் சுப்ரியா தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்டு அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். ஆனால் இதற்கு சுப்ரியா இணங்கவில்லை. அதோடு சுப்ரியா சத்தம் போட்டு கத்த முயன்றார். உடனே பயத்தில் சுப்ரியாவின் தலையை சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார். அதோடு வீட்டில் கிடந்த நைலான் கயிற்றால் சுப்ரியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உடலை வீட்டில் இருந்த ஷோபா கீழே மறைத்து வைத்துவிட்டு தரையில் கிடந்த ரத்த கரையை துணியால் துடைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். வெளியில் சென்ற பிறகு கிஷோருக்கு அவரின் மனைவியை தேட உதவி செய்ததோடு, போலீஸ் நிலையத்தில் புகார் செய்யவும் உதவி செய்துள்ளார்” என்றார். தற்போது கிஷோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
from தேசிய செய்திகள் https://ift.tt/sFJGX6U
0 Comments