மும்பை: ரயில் முன் பாய்ந்த தந்தை; 6 வயது மகன் உயிர் தப்பியது எப்படி?!

மும்பையில் புறநகர் ரயில் மக்களின் உயிர்நாடியாக இருந்து வருகிறது. அதேசமயம் இந்த ரயில்களில் அடிபட்டு தினமும் குறைந்தது 5 பேர் வரை உயிரிழக்கின்றனர். அடிக்கடி பொதுமக்கள் மன அழுத்தம் காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில், மும்பை அருகில் உள்ள வித்தல்வாடி ரயில் நிலையத்தில் ஒருவர் கையில் குழந்தையுடன் மாலை 6 மணிக்கு ரயில் தண்டவாளத்தை நோக்கிச் சென்றார். அவரைப் பிடிக்க சிலர் முயன்றனர். ஆனால், அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தை நோக்கி ஓடினார். அந்த நேரத்தில் ரயில் வந்ததும் அந்த நபர் குழந்தையுடன் குதித்துவிட்டார். அவர் ரயில் தண்டவாளத்தில் குதித்தபோது கைதவறி குழந்தை தண்டவாளத்தில் விழாமல், சிறிது தூரம் தள்ளி விழுந்தது. அதனால், அந்த குழந்தை எந்த வித காயமும் இன்றி உயிர்பிழைத்தது.

ரயில் முன்பு பாய்ந்த தந்தை

ஆனால், குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்த நபரை ரயில் சக்கரம் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்றது. அதில் அந்த நபர் உடல் துண்டுதுண்டாது. ரயில்வே போலீஸார் தண்டவாளத்தில் இருந்து அந்த நபரின் உடல் உறுப்புகளை அள்ளி எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் கையிலிருந்த குழந்தை அவருடையதுதான் என்று விசாரணையில் தெரியவந்தது. போலீஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில், அவர் பெயர் பிரமோத் அந்தாலே என்று தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள உல்லாஸ் நகரில் வசிப்பதாகவும், மும்பையில் இயக்கப்படும் பெஸ்ட் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர். அந்த நபர் கையில் வைத்திருந்த தன் மகனுக்கு 6 வயதாகிறது என்றும், பெயர் ஸ்வராஜ் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் என்ன காரணத்திற்காக மகனோடு தற்கொலை செய்து கொள்ள துணிந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/63CBzPY

Post a Comment

0 Comments