உத்தரப்பிரதேசத்தில் திபியாபூர் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``ஹோலி பண்டிகை வரும் மார்ச் 18-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. வரும் 10-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். இந்த நிலையில், பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஹோலி பண்டிகை அன்று இலவச காஸ் சிலிண்டர்கள் உங்கள் வீடு தேடி வரும். அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க என்ன செய்தது என்று அகிலேஷ் யாதவ் கேட்கிறார். ஒரு நபர் மஞ்சள் கண்ணாடி அணிந்து பார்த்தால், பார்ப்பது அனைத்தும் மஞ்சளாகத் தான் தெரியும். உத்தரப்பிரதேசத்தில் இரண்டு கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், சமாஜ்வாடி கட்சி தோல்வியைச் சந்திப்பது உறுதி. மூன்றாம் கட்டத் தேர்தல் முடியும்போது பா.ஜ.க பெரும்பான்மையுடன் இருக்கும்" என்று கூறினார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/5K2AhMa
0 Comments