பிக்னிக் சென்ற இடத்தில் சர்ச்சை; சிக்கலில் மாட்டிக்கொண்ட நடிகை ஷில்பா ஷெட்டி!

நடிகை ஷில்பா ஷெட்டி தனது சகோதரி மற்றும் கணவருடன் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அலிபாக் கடற்கரைக்கு சுற்றுலா சென்றார். காதலர் தினத்தை கொண்டாட அவர்கள் குடும்பத்தோடு அங்கு சென்றனர். சென்ற இடத்தில் ஷில்பாஷெட்டியும், அவரின் சகோதரியும் சேர்ந்து ஷில்கல் எனப்படும் கடற்பறவைகளுக்கு சாப்பாடு போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஷில்பா ஷெட்டி சகோதரிகளுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். தானே மாவட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் பவன் சர்மா இது தொடர்பாக வனத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் வீரேந்திர திவாரி மற்றும் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கடற்பறவைகளுக்கு காய்ந்த மற்றும் செயற்கையான உணவுகளை ஷில்பாஷெட்டி சகோதரிகள் போடுவதால் அவற்றின் உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, செறிமானப்பிரச்னையும் ஏற்படும்.

கடற்பறவைகள்

ஷில்பாஷெட்டி சகோதரிகள் கடற்பறவைகளுக்கு உணவு கொடுப்பது போன்ற வீடியோவை பொதுமக்கள் பார்ப்பதால் மற்றவர்களும் இது போன்ற காரியத்தில் ஈடுபடக்கூடும். எனவே சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ள இதுபோன்ற வீடியோக்களை அகற்றுவதோடு ஷில்பாஷெட்டி சகோதரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுப்பதன் மூலம் மற்றவர்கள் எதிர்காலத்தில் இது போன்ற காரியத்தில் ஈடுபடமாட்டார்கள். கடற்பறவைகள் உணவாக மீன்கள், புழுக்கள் மற்றும் பூச்சிகளை சாப்பிட்டு தேவையான புரதச்சத்தை எடுத்துக்கொள்கிறது என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஷில்பாஷெட்டி சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஷில்பாஷெட்டியிடம் இது தொடர்பாக கருத்து கேட்க முயன்ற போது தொடர்பு கொள்ள முடியவில்லை. மும்பையில் மெரைன் டிரைவ், தாதர், மாகிம் கடற்கரையில் காலை நேரத்தில் நடைபயிற்சியில் ஈடுபடுபவர்கள் கடற்பறவைகளுக்கு அரிசி போன்ற உணவு தானியங்களை கொடுப்பது வழக்கமாகும். ஷிகல் எனப்படும் கடற்பறவைகள் வெளிநாடுகளில் இருந்து அக்டோபர் மற்றும் மார்ச் மாதத்தில் இந்தியாவிற்கு வருவது வழக்கமாகும். பொதுமக்கள் போடும் உணவு தானியங்களால் இப்பறவைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.



from தேசிய செய்திகள் https://ift.tt/YPFeQDR

Post a Comment

0 Comments