ஹிஜாப் விவகாரம்: 'வெகுமதியாக பெறப்படுகிற பணத்தில்...' முஸ்கான் கான் அறிவிப்பு!

நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்ட கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில், ஒரு இஸ்லாமிய பெண் ஒருவர் வைரலானார். அந்தப் பெண், பீ.பீ முஸ்கான் கான், தன்னுடைய கல்லூரிக்கு சென்றபோது நடந்த நிகழ்வு இது. இந்த நிகழ்வில் காவி துண்டு அணிந்த மாணவர்கள் முஸ்கானை கேரோ செய்ய முயன்றபோது கல்லூரி ஆசிரியர்களும் மற்றவர்களும் தனக்கு ஆதரவாக இருந்ததாக முஸ்கான் தெரிவித்து இருந்தார்.

ஹிஜாப்

பல்வேறு அமைப்புகளில் இருந்தும் அவருக்கு பண வெகுமதிகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் முஸ்கானும் அவரது குடுமபத்தினரும் சேர்ந்து, வெகுமதியாக பெறும் பணத்தின் வழியாக மாவட்ட மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வழங்க முடிவு செய்துள்ளனர். "ஒரு நபர் 5 லட்சம் கொடுத்தார். நாங்கள் அதனைப் பயன்படுத்தி மாவட்ட மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் முஸ்கான் பெயரில் வழங்க உள்ளோம். அதற்கு மேலும் தேவைப்பட்டால் நாங்கள் சொந்த பணத்தில் அதனைச் செய்ய உள்ளோம்" என்கிறார் முஸ்கானின் தந்தை முகமது ஹுசைன் கான்.



from தேசிய செய்திகள் https://ift.tt/VeKOEp9

Post a Comment

0 Comments