கர்நாடகா: `ஹிஜாப்' அணிந்து வந்த மாணவிகளுக்கு கல்லூரிக்குள் அனுமதி மறுப்பு! - வெடித்த சர்ச்சை

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில், இந்து மாணவர்கள் சிலர் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவி உடை அணிந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து கல்லூரி நிர்வாகம், `முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் கல்லூரிக்குள் வர வேண்டாம்' என எச்சரித்திருக்கிறது. இந்த நிலையில், அந்தக் கல்லூரியில் 6 முஸ்லீம் மாணவிகள் தொடர்ந்து ஹிஜாப் அணிந்து வந்ததால், 3 வாரங்களாக கல்லூரிக்குள் அனுமதிக்காமல், தேர்வு எழுதவும் அனுமதிக்க முடியாது என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது.

அதையடுத்து, கல்லூரி நிர்வாகத்தின் இந்த செயலைக் கண்டித்து முஸ்லீம் மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள், ``இந்து மதத்தில் காவி உடையணிவது கட்டாயமென்றால் அவர்களும் காவி உடை அணிந்து வரட்டும். அதேபோல, எங்கள் மதத்தில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம், அது எங்கள் உரிமை.

ஹிஜாப்

தேர்வுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கின்றன. எங்கள் வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். எங்களைத் தேர்வெழுத அனுமதியுங்கள்" என்று கண்ணீர் மல்க கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை முன்வைத்தனர்.

கர்நாடகா கல்லூரி சர்ச்சை

அண்மையில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் மதத்தை வெளிப்படுத்தும் விதமான உடைகளை அணிந்து வரக்கூடாது என கர்நாடக மாநில கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Also Read: கர்நாடகா: ஹிஜாப் அணிந்ததால் மாணவிகளுக்குத் தடை! - கல்லூரி சர்ச்சையில் நடந்தது என்ன?



from தேசிய செய்திகள் https://ift.tt/kirdGzA6V

Post a Comment

0 Comments