கடந்த டிசம்பர் மாதம், கர்நாடக மாநிலம் குண்டப்புராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில், ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித்துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வரவிடாமல் கல்லூரி நிர்வாகம் தடுத்தது. இந்த விவகாரம் தீவிரமானதையடுத்து, "அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமான ஆடைகளை மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குள் அணிந்து வரக்கூடாது" என்று கர்நாடக கல்வித்துறை அறிவித்தது. பின்னர் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், தற்போது முஸ்லிம் மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிந்து வரலாம் என்று பியூ கல்லூரி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. மேலும், ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் தனி வகுப்பறையில் அமரவைக்கப்படுவர் என்றும் கல்லூரி நிர்வாகம் கூறியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
இந்தச் சூழலில், "ராணுவத்தில் விதிகளைப் பின்பற்றுவது போல, கல்வி நிலையங்களிலும் விதிகளைப் பின்பற்ற வேண்டும். சீருடையைப் பின்பற்ற விரும்பாத மாணவ மாணவியர் வேறு வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளலாம்" என கர்நாடக மாநிலக் கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: கர்நாடகா: ஹிஜாப் அணிந்ததால் மாணவிகளுக்குத் தடை! - கல்லூரி சர்ச்சையில் நடந்தது என்ன?
from தேசிய செய்திகள் https://ift.tt/r9ejLlE
0 Comments