மும்பை: மொபைல் கேம் மோகம்; கதாபாத்திரமாகவே மாறி தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

மாணவர்கள் கொரோனா பொதுமுடக்க காலத்தில் அதிக அளவில் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டனர். இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் மொபைல் போனில் கேம் விளையாடுவது இன்னும் குறையவில்லை. கேம் விளையாடும் போது சிறுவர்கள் கேமில் வரும் கதாபாத்திரமாகவே மாறிவிடுகின்றனர். மும்பையில் அதுபோன்று மொபைல் போனில் விளையாடிய 13 வயது மாணவன், பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். சேதன் கனோல்கர் என்ற அந்த மாணவன் அடிக்கடி சகநண்பர்களுடன் சேர்ந்து ப்ரீ ஃபயர் என்ற மொபைல் வீடியோ கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். அதோடு படிப்பு மற்றும் கிரிக்கெட் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கினான். திடீரென மாணவன் சேதன் தனது பெற்றோர் வெளியில் சென்று இருந்த நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்தச் சம்பம் மாணவனின் பெற்றோரை வெகுவாக பாதித்துள்ளது. இதையடுத்து சேதனுடன் அடிக்கடி கேம் விளையாடும் இரண்டு மாணவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

கேம் கதாபாத்திரம்

ஆனால் இதில் பெரிதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து மேலும் மூன்று மாணவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ப்ரீ ஃபயர் கேம் அடிக்கடி விளையாடும் சிலரிடம் இந்த கேம் விளையாடினால் தற்கொலைக்கு தூண்டுமா என்று போலீஸார் கேட்டறிந்துள்ளனர்.

கதாபாத்திரத்தின் உடையணிந்த சிறுவன்

அவர்கள், `தற்கொலைக்கு தூண்டாது. ஆனால், அதற்கு அடிமையாகிவிடுவார்கள். உடன் விளையாடும் நண்பர்கள் உதவவில்லையெனில் ஆபத்தில் முடிந்து விடும்' என்று தெரிவித்திருக்கின்றனர். மாணவனை எது தற்கொலைக்கு தூண்டியது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்காக வல்லுனர்கள் உதவியை நாடியுள்ளனர். மாணவன் தற்கொலைக்கு முன்பாக கேம் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறான். கேமில் வரும் கதாபாத்திரம் அணிந்திருக்கும் உடைபோன்று உடை அணிந்து தற்கொலை செய்திருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். இறந்தபிறகும் கேம் கதாபாத்திரம் போன்று ஒரு கண்ணை மூடியிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ப்ரீ ஃபயர் கேம் ஆபத்தானது என்று மத்திய அரசு தடை செய்துள்ளது. ஆனாலும் இன்னும் விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.



from தேசிய செய்திகள் https://ift.tt/wY3drvf

Post a Comment

0 Comments