வாக்களிக்கும் போது வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்த மேயர்; வழக்கு பதிவு செய்த உ.பி போலீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் 16 மாவட்டங்களில் உள்ள 59 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு மூன்றாம் கட்டமாக நடைபெறுகிறது. இந்த மூன்றாம் கட்டத் தேர்தலில் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், 2.15 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், கான்பூர் பகுதியின் மேயர் பிரமிளா பாண்டே இன்று கான்பூரில் உள்ள ஹட்சன் பள்ளி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளார்.

வக்களிக்கும் போது எடுக்கப்பட்ட புகப்படம்,

அப்போது அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தான் வாக்குப்பதிவு செய்வதை வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் பதிவு செய்திருக்கிறார். மேலும், அவற்றை பல வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக கான்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹட்சன் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கும் ரகசியத்தை மீறியதற்காக திருமதி பிரமிளா பாண்டே மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.



from தேசிய செய்திகள் https://ift.tt/hma47uW

Post a Comment

0 Comments