இந்தியாவில் ஹிஜாப் தொடர்பான விவாதங்கள் அனல் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள ஜெயின் பியூ கல்லூரியில் ஆங்கிலத் துறை விரிவுரையாளர் ஒருவர் கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததை எதிர்த்து தனது பணியை ராஜினாமா செய்திருக்கிறார்.
அந்தக் கல்லூரியின் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த சாந்தினி, ஹிஜாப் தடை தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் அளித்துவிட்டு ராஜினாமா செய்திருக்கிறார். சாந்தினி அந்த கடிதத்தில், ``நான் கடந்த 3 வருடங்களாகக் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து கொண்டுதான் வருகிறேன். தற்போது ஹிஜாபை அகற்றுமாறு கூறுவதால் எனது விரிவுரையாளர் பணியை ராஜினாமா செய்து கொள்கிறேன். மதம்சார்ந்த உரிமைகளைப் பின்பற்ற அரசியலமைப்பு சட்டம் என்னை அனுமதிக்கிறது. இதை யாராலும் மறுக்கமுடியாது. இந்த ஜனநாயகமற்ற செயலைக் கண்டிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கே.டி.ஜெயின் பியூ கல்லூரியின் முதல்வர் மஞ்சுநாத் கூறும்போது, ``கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்குக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹிஜாபைக் கழற்றிவிட்டு வகுப்பிற்குச் செல்லும் படி கூறியதற்கு, அவர் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டார். கல்லூரியில் எந்த ஒரு மாணவர்களும் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படவில்லை" என்றார்.
சாந்தினி தான்ராஜினாமா செய்த மறுநாள் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ``கல்லூரி நிர்வாகத்தின் முடிவை எனது சுயமரியாதையின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகப் பார்க்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/GAYEogt
0 Comments