உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏழு கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்த கட்டங்களுக்கான பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. பிரதமர் மோடி உ.பி-யில் பேரணிக்கு வந்தபோது, உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், பாஜகவின் உன்னாவ் மாவட்டத் தலைவர் அவதேஷ் கட்டியார் ஆகிய இருவரும் பிரதமருக்கு ராமர் சிலையை வழங்கினர்.
பிரதமர் மோடிக்கு ராமர் சிலையை பரிசளித்தபோது, பிரதமர் மோடியின் காலைத் தொட்டு வணங்கினார் அவதேஷ் கட்டியார். பிரதமர் மோடி உடனே தன்னுடைய கால்களைத் தொட வேண்டாம் என்று சைகை காட்டினார். அவதேஷ் கட்டியார், முன்பு உன்னாவ் மாவட்ட பாஜக பொதுச் செயலாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த காட்சி தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் ஹர்தோயில் நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``சமாஜ்வாடி, காங்கிரஸ் தலைவர்களின் அணுகுமுறை கவலையளிக்கிறது. ஒசாமா போன்ற பயங்கரவாதிகளை ஜி என்று அழைக்கின்றனர். 2008-ம் ஒன்று அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பில் 56 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால் சில கட்சிகள் அவர்களுக்காக அனுதாபம் காட்டுகிறது. அகிலேஷ் யாதவின் ஆட்சிக் காலத்தில் மாஃபியாக்கள் சுதந்திரமாக வலம் வந்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் மாஃபியாக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
from தேசிய செய்திகள் https://ift.tt/aeC9PZi
0 Comments